BREAKING: அதிமுகவில் இருந்து டைவ்… பாஜகவில் இணைந்த முக்கிய புள்ளி… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

By Nanthini on மாசி 28, 2026

Spread the love

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அக்கா மகனான கார்த்திகேயன், தற்போது பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், சட்டமன்ற குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ந்தது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியை பூர்வீகமாகக் கொண்ட கார்த்திகேயன், சென்னையில் உணவகத் தொழில் செய்து வருகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு வைகோ திமுகவுடன் கூட்டணி அமைத்ததில் கார்த்திகேயனுக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது. இதன் காரணமாக, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கார்த்திகேயன் அதிமுகவில் இணைந்தார். தூத்துக்குடியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தபோது, அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

   

Vaiko Nephew Karthikeyan Joins BJP in Presence of Nainar Nagendran

   

அதிமுகவில் இணைந்த பிறகு கார்த்திகேயனுக்கு கட்சியில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. கடந்த சில காலமாகவே அதிமுக தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த அவர், அக்கட்சியில் இருந்து விலக முடிவு செய்தார். இந்நிலையில், பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தற்போது அக்கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தமிழகத்தில் பாஜக தனது செல்வாக்கை உயர்த்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், முக்கிய அரசியல் தலைவர்களின் உறவினர்கள் அக்கட்சியை நோக்கி வருவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வைகோவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே பாஜகவில் இணைந்திருப்பது, வரும் தேர்தல்களில் ஒரு பேசுபொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.