விஜய் திருந்தவே இல்லை… 25 வருட வாழ்க்கையில் நம்பிக்கை துரோகம்.. சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டு..!!

By Soundarya on மாசி 27, 2026

Spread the love

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதை தான் கண்டுபிடித்ததாகவும், இது தனது திருமண வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து கேட்டபோது, அந்த நடிகையுடனான உறவை உடனடியாக முறித்துக் கொள்வதாக விஜய் உறுதியளித்த போதிலும், அவர் தொடர்ந்து அந்த உறவில் நீடித்ததாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விஜய் தன்னை உணர்வுப்பூர்வமாகவும் உடல் ரீதியாகவும் புறக்கணித்ததாக சங்கீதா புகார் தெரிவித்துள்ளார். நடிகையுடன் விஜய் கொண்டிருந்த தொடர்பால் தனக்குத் தீராத மன உளைச்சலும், சமூக வலைதளப் பதிவுகள் மூலம் பொதுவெளியில் அவமானமும் ஏற்பட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்தத் திருந்தாத போக்கும், நம்பிக்கைத் துரோகமுமே தாங்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்த திருமண வாழ்க்கையை முடிக்கத் தான் எடுத்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்று சங்கீதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.