சுற்றுலா செல்பவர்கள் கவனத்திற்கு… நீர்யானை எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி…!!!

By Rajeshwari on மாசி 27, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றில், அமைதியாகப் படகு சவாரி செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் மீது நீர்யானை ஒன்று திடீரென ஆக்ரோஷமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற குருகர் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோவில், ஆற்று நீரில் அமைதியாகச் சென்று கொண்டிருந்த படகை, அடியில் மறைந்திருந்த ராட்சத நீர்யானை மின்னல் வேகத்தில் தாக்கி தலைகீழாகக் கவிழ்த்தது.

மேலும் அருகில் இருந்த மற்றொரு படகின் உதவியால் அந்த நபர் நூலிழையில் உயிர் தப்பினார். இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இணையதளத்தில் பெரிய விவாதம் எழுந்துள்ளது. என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ள நிலையில், இது இயற்கையின் கோர முகம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

   

 

View this post on Instagram

 

A post shared by EL ESPAÑOL (@elespanol2015)

   

“>

 

அதே சமயம், பல கேமரா கோணங்களில் மிகத் துல்லியமாகப் படமாக்கப்பட்டுள்ளதால், இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்று மற்றொரு தரப்பினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். எது எப்படியிருந்தாலும், நீர்நிலைகளில் வனவிலங்குகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ நினைவூட்டுகிறது.