தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ல் காதல் திருமணம் செய்த நடிகை சமந்தா 2021ல் அவரை விட்டு பிரிந்தார். பிறகு 2வது திருமணம் செய்துக்கொள்ளவே மாட்டேன் என்று கூறி வந்த சமந்தா, கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி கோவை ஈஷா மையத்தில் வெப் சீரிஸ் டைரக்டர் ராஜ் நெடிமூர் என்பவரை 2வது திருமணம் செய்துக்கொண்டார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சமீபத்தில் இதுகுறித்து நடிகை சமந்தா கூறியதாவது, விவாகரத்து என்ற நிலையை சந்தித்த போது இனி யாரையும் நம்பவோ நெருங்கி பழகவே முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால் அன்பையும் நட்பையும் ஏற்றுக் கொண்ட போதுதான் என்னை நானே மீண்டும் கண்டுகொண்டேன். இன்று நான் ஒரு மேம்பட்ட நபராக இருப்பதற்கு காரணம் ராஜ் நெடிமூர் தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் சுதந்திரமாக சுவாசிப்பதாக என் தோழி கூறியது என் மனதை தொட்டது. இனி நான் யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகை சமந்தா கூறியிருக்கிறார்.
