கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் ஷாஹாபூர் பகுதியில் உள்ள ஒரு மடத்தின் சாமியாரான மல்லிகார்ஜுனா முத்தவா என்பவர், ஏழு வயது சிறுமியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சிறுமியின் பெற்றோர்கள் முன்னிலையிலேயே அந்தச் சாமியார் சிறுமியைத் தனது மடியில் அமர வைத்து முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
A self-styled godman in Karnataka’s Yadgir district has been booked under the Protection of Children from Sexual Offences (Pocso) Act after a viral video showing him behaving inappropriately with a seven-year-old girl sparked outrage. The video shows the godman, Mallikarjuna… pic.twitter.com/5edAIElrHA
— IndiaToday (@IndiaToday) February 26, 2026
இந்த விவகாரத்தை கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (KSCPCR) தானாக முன்வந்து கவனித்தது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட சாமியார் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட்டது. சிறுமியின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் மீறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஷாஹாபூர் போலீசார் சாமியார் மல்லிகார்ஜுனா முத்தவா மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரின் முன்னிலையிலேயே இச்சம்பவம் நடந்திருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
