அடிதூள்….. இனி மாதம் மாதம் ரூ.3000…. தமிழக அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு…!

By Nanthini on மாசி 27, 2026

Spread the love

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார். நீண்ட நாட்களாகப் போராடி வந்த இவர்களின் கோரிக்கையை ஏற்று, அங்கன்வாடிப் பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் தற்போதுள்ள 2,000 ரூபாயிலிருந்து 3,400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இவர்களின் பணி ஓய்வுக்கால ஒட்டுமொத்தப் பயனும் (Retirement benefits) 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வனத் துறையின் களப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 3,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியமும் 1,100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, இறுதிச் சடங்கு நிதியாக 20,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகள் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்குப் பெரும் வாழ்வாதார உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.