BREAKING: திமுகவுடன் கூட்டணி…. காலையிலேயே அறிவித்த பிரபல கட்சி….. செம குஷியில் ஸ்டாலின்….!

By Nanthini on மாசி 26, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில தேசிய லீக் கட்சி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித சமரசமுமின்றி, தடம் மாறாமல், கொள்கை உறுதியோடு திமுகவை ஆதரித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மையினரின் நலன் மற்றும் சமூக நீதியைக் காப்பதில் திமுகவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற தங்கள் கட்சி முழுவீச்சில் களப்பணியாற்றும் என அவர் உறுதி அளித்துள்ளார். “நிறம் மாறாத கொள்கை உறவு” என்ற முழக்கத்தோடு, திமுக அணியின் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாகவும் திருப்பூர் அல்தாப் தெரிவித்துள்ளார். இந்த இணைப்பானது திமுகவின் வாக்கு வங்கியை வலுப்படுத்துவதுடன், தேர்தல் களத்தில் அக்கணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.