சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, முட்டை பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் படைப்பாளி ஷாலினி சர்மா என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், சந்தையில் விற்கப்படும் முட்டைகளில் பிளாஸ்டிக் போன்ற ஒரு பொருள் கலந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தான் வாங்கிய அவித்த முட்டையை வெட்டிப் பார்த்தபோது, அதன் உள்ளே நூடுல்ஸ் போன்ற விசித்திரமான ஒரு வடிவம் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
மேலும் அந்தப் பொருள் கைகளால் அழுத்தினாலும் நசுங்காமல் பிளாஸ்டிக் போலவே இருந்ததாகவும், அவித்தபோது முட்டை உடைந்ததால் மட்டுமே இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததாகவும் அவர் அந்த வீடியோவில் விளக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் தங்களின் கவலைகளையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இத்தகைய கலப்பட முட்டைகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து அச்சம் தெரிவித்துள்ள நிலையில், மற்ற சிலர் அறிவியல் ரீதியான ஆதாரம் இன்றி இத்தகைய வீடியோக்களை நம்ப வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர்.
View this post on Instagram
“>
இதற்கிடையில், குறிப்பிட்ட முட்டை நிறுவனம் ஒன்றின் பெயரில் இந்த வீடியோவில் மன்னிப்பு கோரப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது இந்த விவாதத்தை மேலும் சூடாக்கியுள்ளது. உணவில் நடக்கும் இத்தகைய அதிர்ச்சிகரமான கலப்படங்கள் குறித்து மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்த வீடியோ சமூக வலைதளங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
