பிரேமலதாவுடன் கூட்டணி.. திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி… அண்ணையா தலையில் இடியை இறக்கிய அண்ணியார்….!

By Nanthini on மாசி 26, 2026

Spread the love

தேமுதிகவின் அதிரடி கோரிக்கையால் திமுக கூட்டணி வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலில் 10 சட்டமன்றத் தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா இடத்தையும் தேமுதிக தலைமை வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, அக்கட்சிக்குச் செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படும் ரிஷிவந்தியம், விருத்தாசலம், விக்கிரவாண்டி, விருகம்பாக்கம் மற்றும் மதுரை தெற்கு உள்ளிட்ட முக்கிய தொகுதிகளின் பட்டியலை தேமுதிக முன்வைத்துள்ளது. விஜயகாந்த் அவர்களின் கோட்டையாகக் கருதப்பட்ட தொகுதிகளில் மீண்டும் கால்பதிக்க தேமுதிக காட்டும் ஆர்வம், திமுக தலைமைக்கு ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.

இருப்பினும், திமுக தரப்போ தேமுதிகவின் இந்த “மெகா” கோரிக்கையை அப்படியே ஏற்கத் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய கள நிலவரத்தைக் கணக்கிட்டு, 7 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்க திமுக முன்வந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதிகளைப் பிரிப்பதில் இரு தரப்புக்கும் இடையே இழுபறி நீடித்தாலும், தேர்தலுக்கு முன்னதாக ஒரு சுமூகமான உடன்பாட்டை எட்ட பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த இடப்பங்கீடு இறுதியாகும் பட்சத்தில், தமிழக தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது