Actor Ajith Kumar

நான் அப்படி செய்திருக்க கூடாது… மன்னிச்சிடுங்க… – நடிகர் அஜீத்குமாரிடம் மன்னிப்பு கேட்ட தொகுப்பாளர் டிடி!

By Elango on மாசி 25, 2026

Spread the love

விஜய் டிவியில் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி. ஆனால் டிடி என்றுதான் அனைவராலும் அன்பாக அழைக்கப்படுகிறார். சினிமா விருது விழாக்கள், இசை வெளியீட்டு விழாக்கள் மற்றும் நடிகர்கள் நடிகைகள் பங்கேற்கும் முக்கிய விழாக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக டிடி இருந்து வருகிறார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் டிடி நடிகர் அஜீத்குமாரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய டிடி கூறுகையில், நடிகர் அஜீத்குமார் நடித்த வேதாளம் என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் என்னுடைய கெட்ட நேரம் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. 10 வருஷமா இதை மனசுல வெச்சுட்டு இருக்கேன். ரொம்ப ஸாரி சார் என்று டிடி அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.