“இனி இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது”… மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்…. தமிழக அரசு ஷாக் ….!

By Nanthini on மாசி 25, 2026

Spread the love

மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர 2026 ஆம் ஆண்டிற்கான புதிய விதிகளை அறிவித்துள்ளன. இதன்படி, தகுதியற்ற பயனாளிகளை நீக்கிவிட்டு, உண்மையான ஏழை எளிய மக்களுக்கு பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய ஏப்ரல் 1, 2026 முதல் கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன. டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே பதிவு நடைமுறைகள் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் பிப்ரவரி 28, 2026-க்குள் தங்களது e-KYC (மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு) நடைமுறையை முடிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று கைரேகை பதிவு (Biometric) மூலமாகவோ அல்லது ‘மேரா ரேஷன்’ (Mera Ration) செயலி மூலம் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தியோ இந்த சரிபார்ப்பை மேற்கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் KYC செய்யத் தவறினால், மார்ச் 1 முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

   

மேலும், புதிய விதிகளின்படி குடும்பத்தில் யாராவது வருமான வரி செலுத்துபவராக இருந்தாலோ அல்லது நான்கு சக்கர வாகனம் (டிராக்டர் தவிர) வைத்திருந்தாலோ அவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். தொடர்ந்து மூன்று மாதங்கள் ரேஷன் பொருட்களை வாங்காதவர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அதே சமயம், பயனாளிகளின் வசதிக்காக 3 மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளும் புதிய வசதியும் சில மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.