தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப் படங்களை தந்தவர் அட்லி. ராஜா ராணி தெறி மெர்சல் பிகில் என ஹிட் படங்களை கொடுத்த அட்லி இந்தியில் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கினார். அந்த படமும் ரூ. 1150 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இப்போது ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிக்கும் ஒரு பிரமாண்ட சயன்ஸ்பிக்சன் படத்தை அவர் இயக்கி வருகிறார்.
நேர்காணல் ஒன்றில் இயக்குனர் அட்லி கூறியதாவது, ஒரு ஹீரோ கிட்ட கதை சொல்லும் போது எப்படி படம் பார்க்கிறோமோ அதே மாதிரி தான் கதையை சொல்லுவேன். 3 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் இதுக்கு எடுத்துக்குவேன். அவ்வளவு விளக்கமாக கதையை நான் சொல்லுவேன். இதுவரைக்கும் எந்த ஹீரோவும் கதையை கேட்டுட்டு என்கிட்ட கதை பிடிக்கலைன்னு நோ சொன்னதே இல்லை என்று இயக்குனர் அட்லி கூறியிருக்கிறார்.
