மக்களே..! புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி..!

By Soundarya on மாசி 23, 2026

Spread the love

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை (Smart Ration Cards) விநியோகிக்கத் தமிழக அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, 2025 டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக விண்ணப்பித்தவர்களின் கார்டுகளை அச்சிடும் பணிகள் சுமார் 90% நிறைவடைந்துள்ள நிலையில், அவை ஓரிரு நாட்களில் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 2 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்காகக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கார்டு அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படும். அவ்வாறு குறுஞ்செய்தி பெற்றவர்கள் தாலுகா வழங்கல் அலுவலகங்களுக்குச் சென்று தங்களது புதிய குடும்ப அட்டைகளை நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். கார்டுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் மூலம் ரேஷன் கடைகளில் தங்களுக்குரிய பொருட்களைப் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.