சற்றுமுன் விஜய் கட்சியில் இணைந்தார்… டிடிவி தினகரன் அதிர்ச்சி… தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

By Nanthini on மாசி 20, 2026

Spread the love

தஞ்சை டெல்டா பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தூணாக விளங்கிய வழக்கறிஞர் மதியழகன், தற்போது அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமமுகவின் தஞ்சை மாநகர மாவட்ட பொருளாளராகப் பணியாற்றி வந்த இவர், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைப் பெற டி.டி.வி. தினகரன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், டெல்டா பகுதியில் செல்வாக்கு மிக்க மதியழகனின் இந்த விலகல் அமமுகவிற்குப் பலத்த பின்னடைவாகவும், விஜய்யின் தவெகவிற்குப் கூடுதல் பலமாகவும் பார்க்கப்படுகிறது.