அடக்கொடுமையே..! உறுப்பு ஊடுருவல் இல்லையெனில் அது பாலியல் வன்கொடுமை அல்ல… நீதிமன்றத்தின் சர்ச்சை தீர்ப்பு…!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பு நுழையாமல் விந்து வெளியேறுவது ‘பாலியல் வன்கொடுமை’ (Rape) ஆகாது என்றும், அது ‘பாலியல் வன்கொடுமை முயற்சி’ மட்டுமே என்றும் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு தம்தரி மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த போது நீதிமன்றம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கன்னித்திரை சேதமடையவில்லை என்ற மருத்துவ ஆதாரங்களையும், பெண்ணின் வாக்குமூலத்தில் இருந்த முரண்பாடுகளையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375-ன் படி, மிகச் சிறிய அளவிலாவது ஊடுருவல் (Penetration) இருந்தால் மட்டுமே அதை பாலியல் வன்கொடுமையாகக் கருத முடியும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

   

இதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கீழமை நீதிமன்றம் விதித்த 7 ஆண்டு சிறைத் தண்டனையை, பாலியல் வன்கொடுமை முயற்சி என்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் 6 மாதங்களாகக் குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பல உயர் நீதிமன்றங்கள் இது போன்ற வினோதமான தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையில், சத்தீஸ்கர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தற்போது சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.