தமிழ்நாடே ஷாக்..! இது நடக்கும் வரை தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது… ராமதாஸ் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!

By Soundarya on மாசி 20, 2026

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி தற்போது நீதிமன்றப் படியாக ஏறியுள்ளது. கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதால், தேர்தல் ஆணையம் அவரைத் தலைவராக அங்கீகரித்துள்ளதுடன், கட்சியின் ‘மாம்பழம்’ சின்னமும் அவர் வசம் உள்ளது. இந்நிலையில், அன்புமணி தரப்பு அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள சூழலில், இந்த உட்கட்சி பூசல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

தன்னை பா.ம.க.வின் தலைவராக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யும் வரை, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது என்று கோரி டாக்டர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்தத் திடீர் வழக்கால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது அங்கீகாரம் உறுதிப்படுத்தப்படும் முன்னரே தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதே ராமதாஸின் வாதமாக உள்ளது.

   

இந்த முக்கியத்துவம் வாய்ந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே அன்புமணியைத் தலைவராக அறிவித்துள்ள நிலையில், ராமதாஸின் இந்த சட்டப் போராட்டம் தேர்தலுக்கு முன்பாக பாமகவில் எந்த மாதிரியான மாற்றங்களை உருவாக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.