திமுகவுக்கு அதிர்ச்சி.. அதிமுகவில் கூண்டோடு இணைந்தார்…. செம குஷியில் துள்ளும் எடப்பாடி….!

By Nanthini on மாசி 19, 2026

Spread the love

மதுரை திமுகவில் கடந்த சில நாட்களாக அரங்கேறி வரும் அரசியல் மாற்றங்கள் அந்த மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர விசுவாசிகளாக அறியப்பட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவது திமுகவிற்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு அழகிரியின் வலதுகரமாகத் திகழ்ந்த மதுரை மன்னன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரான எஸ்.ஆர். கோபியும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். மதுரை அரசியலில் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்திய இந்த நிர்வாகிகள், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அடுத்தடுத்த கட்சித் தாவல்கள் மதுரை மாவட்ட திமுகவில் ஒருவித சலசலப்பை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியிருப்பது, வரும் தேர்தல்களில் திமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற விவாதத்தை அரசியல் விமர்சகர்களிடையே கிளப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைப்புகள், தென் மாவட்டங்களில் அதிமுகவைத் பலப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. கோபி மற்றும் மதுரை மன்னன் போன்ற அடிமட்டத் தொண்டர்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள நிர்வாகிகள் வெளியேறுவது, மதுரையில் திமுகவின் கோட்டையைத் தக்கவைப்பதில் புதிய சவால்களை ஏற்படுத்தக்கூடும்.