காட்டு விலங்குகளை எவ்வளவுதான் அன்பாக வீட்டில் வளர்த்தாலும், அவற்றின் வேட்டை குணம் எப்போதும் மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், படிக்கட்டில் அமர்ந்திருக்கும் ஒரு செல்லப் சிங்கத்தின் அருகில் ஒரு நபர் அமர்ந்து அதை விளையாட்டாக அழைக்கிறார். அந்தச் சிங்கம் முதலில் அமைதியாக வருவது போலத் தெரிந்தாலும், திடீரென ஆக்ரோஷமாக மாறி அந்த நபரின் கழுத்தைப் பிடித்து கடிக்கத் தொடங்குகிறது. ஒரு நொடியில் அந்த நபரின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் இந்தச் சம்பவம் பார்ப்போரை உறைய வைக்கிறது.
🚨A lion remains a lion, and the instinct to hunt cannot be erased—even if it is raised at home and cared for since childhood. pic.twitter.com/u1XRePzxpS
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) February 16, 2026
நல்லவேளையாக, அங்கிருந்த மற்றொரு நபர் (சிங்கத்தைப் பராமரிப்பவராக இருக்கலாம்) உடனடியாக விரைந்து வந்து, சிங்கத்தின் முகத்தில் ஒரு பலமான அறையை விடுகிறார். அந்த அடியினால் மிரண்டு போன சிங்கம், உடனே அந்த நபரை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிடுகிறது. சுமார் 50 லட்சம் பார்வைகளைக் கடந்து வைரலாகி வரும் இந்த வீடியோ, “சிங்கம் எப்போதுமே சிங்கம்தான், அதை வளர்த்தாலும் அதன் வேட்டை உள்ளுணர்வு மாறாது” என்ற கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. விலங்குகளிடம் காட்டும் அதீத துணிச்சல் ஆபத்தில் முடியலாம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
