அதிமுக செஞ்ச அந்த ஒரு தப்பு… கையை காட்டி கிரீன் சிக்னல் கொடுத்த திமுக… தேமுதிக விஷயத்தில் EPS கோட்டை விட்டது இப்படித்தான்…!!

By Soundarya on மாசி 19, 2026

Spread the love

2024 மக்களவைத் தேர்தலின்போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், பின்னர் எடப்பாடி பழனிசாமி அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுக தலைமை மீது அதிருப்தியும் நம்பிக்கையற்ற சூழலும் தேமுதிகவினரிடையே நிலவி வந்தது. இத்தகைய சூழலில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிகவுக்கு ஒரு எம்பி சீட் வழங்க திமுக தரப்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, பிப்ரவரி 19, 2026 அன்று தேமுதிக அதிகாரப்பூர்வமாக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது. முன்னதாக அதிமுக அளித்த வாக்குறுதியை அப்போதே நிறைவேற்றியிருந்தால், இத்தகைய பின்னடைவை அவர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள அரசியல் சூழலில், தேமுதிகவின் இந்தத் திடீர் முடிவு அதிமுக கூட்டணிக்கு ஒரு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.