“அம்மா SORRY.. நான் சாகப் போறேன்.. அவனை சும்மா விடாதீங்க”… இளம்பெண் எழுதிய கடைசி கடிதம்…. சேலத்தில் நடந்த பயங்கரம்….!

By Nanthini on மாசி 18, 2026

Spread the love

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே, காதலனின் திருமண வற்புறுத்தல் மற்றும் மிரட்டல் காரணமாக தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழகனூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான சண்முகப்பிரியா என்ற அந்த ஆசிரியை, கவுதம் என்பவரை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். காலப்போக்கில் கவுதமின் நடத்தை பிடிக்காததால் சண்முகப்பிரியா காதலைத் துண்டித்துள்ளார். இருப்பினும், ஆத்திரமடைந்த கவுதம், அவரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதுடன், சம்மதிக்காவிட்டால் அவரது புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த மன உளைச்சலைத் தாங்க முடியாத சண்முகப்பிரியா, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தில், “நான் மகிழ்ச்சியாக வாழவே ஆசைப்பட்டேன், ஆனால் அவன் என் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டான்; அவனைச் சும்மா விடாதீர்கள்” என்று தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். தனது தாயார் மற்றும் சகோதரியிடம் மன்னிப்புக் கேட்டுள்ள அவர், தன்னைத் தற்கொலைக்குத் தூண்டிய கவுதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தற்போது இச்சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.