கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் முகம்மது சுஹைல் அன்சாரி, திருமணமான இளம்பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இவர்களின் பழக்கத்தை அறிந்த பெண்ணின் கணவர் தனது மனைவியைக் கண்டித்ததால், மனமுடைந்த அந்தப் பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது மரணத்திற்கு முகம்மது சுஹைல் அன்சாரி தான் காரணம் என்று அந்தப் பெண் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தற்கொலை வழக்கு தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தற்கொலைக்குத் தூண்டியதாக முகம்மது சுஹைல் அன்சாரியைக் கைது செய்தனர். அரசியல் பொறுப்பில் இருக்கும் ஒருவரே இது போன்ற சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்ட சம்பவம் கேரள அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
