விஜய் குறித்த அந்த கேள்வி… நச்சுன்னு ஒரே வார்த்தையில் பதில் சொன்ன சீமான்…!!

By Soundarya on மாசி 18, 2026

Spread the love

திருச்சியில் இன்று (பிப்.18, 2026) செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ ஒரு மிகப்பெரிய எழுச்சி மாநாடாக அமையும் என்று தெரிவித்தார். இந்த மாநாட்டு மேடையிலேயே தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்றும், தான் எந்தத் தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என்ற அறிவிப்பும் அன்றைய தினமே வெளியாகும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அதை தம்பியிடம் தான் கேட்க வேண்டும்” என்று சுருக்கமாகக் கூறி கடந்து சென்றார். கட்சி வழக்கமான தேர்தல் அறிக்கையை வெளியிடாது என்றும், அதற்குப் பதிலாக விரிவான ‘ஆட்சி வரைவு’ புத்தகத்தை வெளியிட உள்ளதாகவும் அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.