நடிகர் சரத்குமார் கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நடிகராக தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இப்போது கேரக்டர் ரோல்களில் படங்களில் நடித்து வருகிறார். அவரது மனைவி ராதிகாவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறது. வருகிற 27ம் தேதி அவர் நடித்த தாய்கிழவி படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை ராதிகாவின் கணவர் நடிகர் சரத்குமார் கூறியதாவது, இந்தியாவிலேயே ஒரு சிறந்த நடிகை என்றால் அது ராதிகா தான். ஆனால் அவங்களுக்கு ஏன் இன்னும் தேசிய விருது கொடுக்கலைன்னு தெரியலே, யார் யாருக்கோ தேசிய விருது கொடுக்கிறார்கள். ஆனால் ராதிகாவுக்கு கொடுக்காதது எனக்கு வருத்தம் தான். எம்ஆர் ராதா எவ்வளவு பெரிய நடிகர். அவர் பெயரைக் காப்பாற்றியது ராதிகாவும் ராதா ரவியும் தான் என்று நடிகர் சரத்குமார் ஆதங்கமாக அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
