Actress Devyani

தயவுசெஞ்சு என் மகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க… மேடையிலேயே பகிரங்கமாக கேட்ட பிரபல நடிகை!

By Elango on மாசி 18, 2026

Spread the love

பாடகர்கள் திப்பு – ஹரிணி தம்பதியின் மகன் தான் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இசைக் கலைஞரான அவர் இசையமைத்து பாடிய கட்சி சேர மற்றும் ஆச கூட ஆகிய பாடல்கள் வெளியாகி இளைஞர்கள் மத்தில் ட்ரெண்டிங் ஆகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சாய் அபயங்கர் இசையமைத்த டியூட் பல்டி ஆல்பங்களும் பெரிய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தன. அதைத் தொடர்ந்து இப்போது திரைப்படங்களில் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பங்கேற்றார். அப்போது மேடையில் நடிகை தேவயானி பேசுகையில், முதலில் சாய் அபயங்கரின் அம்மா மற்றும் அப்பாவின் ரசிகை நான். இப்போது சாய் அபயங்கரின் ரசிகையாகவும் மாறி விட்டேன். என் மகளும் அவரது ரசிகைதான் என் மகள் இனியா நன்றாக பாடுவாள். அவளுக்கு உங்களுடன் பாட வேண்டும் என்பதுதான் கனவு. ஏதாவது வாய்ப்பு இருந்தால் என் மகளுக்கு கொடுங்கள் என்று நேரடியாக கேட்டுக்கொண்டார்.