“வயல்வெளியே வகுப்பறை” நேஷனல் மெடல் வாங்கியும் மாடு மேய்க்கும் 8-ம் வகுப்பு சிறுவன்… என்ன காரணம்..? நேரமே இல்லன்னு சொல்றவங்க இந்த வீடியோவைபாருங்க…!!

By Soundarya on மாசி 18, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பிரதாப் சிவங்கேகர் என்ற எட்டாம் வகுப்பு மாணவனின் படிப்பு ஆர்வம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பலருக்கும் பெரும் உத்வேகத்தை அளித்து வருகிறது. அந்த வீடியோவில், திறந்த வெளியில் கால்நடைகள் மேய்ந்து கொண்டிருக்கும் வேளையில், அவற்றிற்கு நடுவே அமர்ந்து பிரதாப் மிகவும் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். அதிகாலை 5:30 மணிக்கே வயலுக்கு வந்து தனது வீட்டு வேலைகளைச் செய்து முடிப்பதுடன், எவ்வித இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து அவர் கல்வி பயிலும் காட்சி, “நேரம் இல்லை” என்று சாக்குப்போக்கு சொல்பவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

 

   
View this post on Instagram

 

A post shared by Swadesh sutar (@mr_dribble_machine)

இந்த சிறுவன் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் சிறந்து விளங்குகிறான் என்பது கூடுதல் ஆச்சரியம். ‘மிஷன் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி 2025’-ல் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வசதிகள் குறைவு என்று குறை கூறாமல், கடின உழைப்பையும் மன உறுதியையும் மூலதனமாகக் கொண்டு முன்னேறும் பிரதாப்பின் இந்த வைரல் வீடியோ, 34 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையவாசிகள் பலரையும் நெகிழ வைத்துள்ளது. எத்தகைய சூழலிலும் லட்சியத்தை அடைய முடியும் என்பதற்கு இந்த சிறுவனே ஒரு வாழும் உதாரணம்.