தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இளம் நடிகர்களாக மணிகண்டன் பிரதீப் ரங்கநான் இருந்து வருகின்றனர். குடும்பஸ்தன் லவ்வர்ஸ் லவ்டுடே போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் மணிகண்டன். அதே போல் லவ்டுடே டிராகன் டியூட் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் யாராவது கதை சொல்ல நடிகர் மணிகண்டனை போனில் தொடர்பு கொண்டால், என்ன ஏது என்று கூட விசாரிக்காமல் இன்னும் 2 ஆண்டுகளுக்கு நான் ரொம்பவும் டைட் கால்ஷீட்டில் இருக்கிறேன். அப்புறம் பார்க்கலாம் என்று தொடர்பை துண்டித்து விடுகிறார். பிரதீப் ரங்கநாதனிடம் யாராவது போனில் அழைத்தால், 25 கோடி ரூபாய் எனக்கு சம்பளம் என்றால் மேற்கொண்டு பேசுங்க என்று சொல்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. வளரும் நடிகர்களாக இருக்கும் போதே இத்தனை அலப்பரையா என ரசிகர்கள் பலரும் ஷாக்கில் உள்ளனர்.
