தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்துக்கு சேயோன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சேயோன் என்றால் சூரியன் மூத்த தமிழ்குடி குறிஞ்சித் தலைவன் மற்றும் குறுநில தலைவன் என்று பொருள் என்கின்றனர். அந்த வகையில் சேயோன் என்றால் முருக கடவுள் என்பதுதான் அர்த்தம்.
அந்த வகையில் இது பக்தி படமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற ஏப்ரலில்தான் துவங்குகிறது. அதற்கு முன்பாக தாய்கிழவி படம் ரிலீஸ் ஆவதால் அந்த படத்தின் பிரமோசன் சக்சஸ் மீட் தேங்க்ஸ் மீட் மற்றும் தியேட்டர் விசிட் என பல பணிகள் இருப்பதால் ஏப்ரலில் சேயோன் ஷூட்டிங் என படக்குழு திட்டமிட்டுள்ளது.
