தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 17, 2026) தாக்கல் செய்யப்பட்ட 2026-2027 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், உயர்கல்வித் துறைக்காக ரூ.8,505 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு உயர்கல்வியைப் போலவே பள்ளிக் கல்விக்கும் முன்னுரிமை அளித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் புதிய தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
