அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இது தொடர்பாக தான் முழுமையாக நிரபராதி என நிரூபிக்கப்பட்டுவிட்டதாகவும் (Exonerated) தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் ஆவணங்களை நீதித்துறை சமீபத்தில் வெளியிட்டது. இதில் தன்னைக் குறிக்கக்கூடிய ஆதாரங்கள் எதையும் அதிகாரிகள் கண்டறியவில்லை என்றும், மாறாக ஜனநாயகக் கட்சியினரே இதில் சிக்கியுள்ளதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். 1990-களில் எப்ஸ்டீனுடன் சமூக ரீதியாகப் பழகியதை டிரம்ப் ஒப்புக்கொண்டாலும், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அவருடனான நட்பைத் துண்டித்துவிட்டதாகக் கூறியுள்ளார். எப்ஸ்டீன் ஒரு “அருவருப்பான நபர்” (Creep) என்பதால் தனது மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) விடுதியிலிருந்து அவரை வெளியேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடுவதன் மூலம் தனது அரசியல் பிம்பத்தைச் சிதைக்க ஜனநாயகக் கட்சியினர் முயற்சிப்பதாகத் தெரிவித்த டிரம்ப், இந்த விவகாரத்தில் இருந்து நாடு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய நேரம் இது என்றும் கூறினார்.
