ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், கொல்கத்தா வட்டத்தில் உள்ள அனைத்து போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கும் அன்லிமிட்டெட் டேட்டா (Unlimited Data) சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் அதிவேக இணைய சேவையைத் தடையில்லாது அனுபவிக்க முடியும். குறிப்பாக, ரூ.449 விலையில் தொடங்கும் அடிப்படைத் திட்டங்கள் முதல் உயர்தரத் திட்டங்கள் வரை அனைத்திலும் இந்தச் சலுகை வழங்கப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த புதிய சலுகையின் கீழ், ஒரு மாதத்திற்கு 300GB வரை அதிவேக டேட்டாவை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். கொல்கத்தா வட்டாரத்தில் உள்ள அனைத்து ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் இந்தச் சேவை தானாகவே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5G சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது கூடுதல் பலனாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
