பாகிஸ்தான் அணியில் வெடித்த பூகம்பம்… இந்தியாவிடம் மண்டியிட்ட சீனியர் வீரர்கள்… “இனி இவங்க பாட்சா பலிக்காது” கடுமையாக சாடிய முகமது யூசுப்…!!

By Soundarya on மாசி 16, 2026

Spread the love

கொழும்பில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அடைந்த படுதோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றங்கள் தேவை என அந்நாட்டின் முன்னாள் ஜாம்பவான் முகமது யூசுப் போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்தியா நிர்ணயித்த 176 ரன்கள் என்ற இலக்கை துரத்த முடியாமல் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது, உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான அவர்களின் தோல்வி கணக்கை 8-1 என மாற்றியுள்ளது. இந்தத் தோல்விக்குக் காரணமான மூத்த வீரர்களின் மெத்தனப்போக்கைச் சுட்டிக்காட்டிய யூசுப், குறிப்பாக பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஷதாப் கான் ஆகியோரை அணியிலிருந்து நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

“சிறிய அணிகளுக்கு எதிராக ரன்களைக் குவித்து வெற்றிகளைப் பெறுவதில் எவ்விதப் பயனும் இல்லை; இந்தியா போன்ற பலமான அணிகளுக்கு எதிரான முக்கியமான தருணங்களில் சொதப்புவது ஏற்கத்தக்கதல்ல” என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார். இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வலுவான நிலையை எட்டிய போது, பாகிஸ்தான் வீரர்கள் காட்டிய பொறுப்பற்ற ஆட்டம் அந்நாட்டு கிரிக்கெட்டில் பெரும் மாற்றத்திற்கான கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் டி20 அணிக்கு இனி புதிய மற்றும் இளம் வீரர்களே தேவை என்ற முகமது யூசுப்பின் இந்த அதிரடி கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.