திடீர் பரபரப்பு..! “விசிலுக்கு தானே தடை” IND-PAK மேட்ச்சில் மாஸ் காட்டிய TVK கொடி… மைதானத்தில் தொண்டர்கள் செய்த ‘வேலை’.. வைரல் வீடியோ

By Soundarya on மாசி 16, 2026

Spread the love

நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியுடன் தொண்டர்கள் நின்றிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோயில் மற்றும் விளையாட்டு மைதானம் எனப் பொது இடங்கள் பலவற்றிலும் தவெக கொடியுடன் அக்கட்சியின் தொண்டர்கள் சமீபகாலமாகத் தொடர்ந்து வருகை தந்து வருகின்றனர். அந்த வகையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த முக்கியமான ஆட்டத்திலும் தவெக கொடி இடம்பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

   
View this post on Instagram

 

A post shared by Video Memes (@videomemes.vm)

இதற்கு முன்னதாக, சென்னையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியின் போது மைதானத்திற்குள் விசிலடிக்கத் தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில், இந்தியா – பாகிஸ்தான் மோதலில் தவெக கொடி ஏந்தியபடி தொண்டர்கள் உற்சாகப்படுத்திய காட்சிகள் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களத்தைத் தாண்டி விளையாட்டு மைதானங்களிலும் தவெக கொடி காட்சியளிப்பது ஒரு புதிய விவாதத்தை இணையத்தில் உருவாக்கியுள்ளது.