actress seetha

இயற்கை விவசாயி ஆக மாறிய பாண்டியராஜன் பட நாயகி… என்ன காரணம் தெரியுமா?

By Elango on மாசி 15, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கி நடித்த ஆண்பாவம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சீதா. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 1980 – 90களில் முன்னணி நாயகியாக நடிகை சீதா வலம் வந்தார். இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்திபன் சீதா பிரிந்து விட்டனர்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு படங்களில் அம்மா கேரக்டரிலும் டிவி சீரியல்களிலும் சீதா பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்போது நடிகை சீதா இயற்கை விவசாயி ஆக மாறி விட்டார். நடிகை சீதா சிறுவயதிலிருந்தே தனது பாட்டி வீட்டில் விவசாய சூழல்களால் ஈர்க்கப்பட்டவர். அதனால் சொந்தமாக நஞ்சு இல்லாத உணவை விளைவிக்க வேண்டும் என்ற எண்ணம் சீதாவுக்கு ஏற்பட்டுள்ளது.

   

கோவை பகுதியில் இதற்காக சொந்தமான விவசாய நிலம் வாங்கி, அந்த நிலத்தில் சீதாவனம் என்ற பெயரில் இயற்கை பண்ணையை உருவாக்கி அதில் பல காய்கறிகளை வித்திட்டு வளர்த்து வருகிறார். இரசாயனம் பயன்பாடு இன்றி இயற்கை உரங்களை கொண்டு ஆரோக்கியமான காய்கறிகளை உற்பத்தி செய்வதில் நடிகை சீதா ஆர்வம் காட்டி வருகிறார்.