தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என புகழ் பெற்றவர் ஷங்கர். கடந்த 30 ஆண்டுகளில் அவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை 15 தான். இதில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களை தவிர ஒரு இந்தி படம் உட்பட 13 படங்களும் அவரது இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. அடுத்ததாக வேள்பாரி என்ற வரலாற்று நாவலை அவர் படமாக உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஷங்கர் கூறியதாவது, சினிமா பத்தி எவ்வளவோ புத்தகம் வந்து இருக்கு. ஆங்கிலத்தில் நிறைய அது மாதிரியான புத்தகங்கள் வந்திருக்கு. ஆனால் அதெல்லாம் ஹாலிவுட் இயக்குனர்களுக்கு தான் உதவும். நம்ம ஊருக்கு டைரக்டர் பாக்யராஜ் சார் திரைக்கதை பற்றி புக் எழுதணும். ஏன்னா இப்பவும் அவர்தான் திரைக்கதை கிங் ஆக இருக்கார். இதுதான் என்னுடைய கோரிக்கை என்று இயக்குனர் ஷங்கர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
