SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. ரூ.25,000-க்கு மேல் பணம் அனுப்புறீங்களா..? இன்று முதல் புதிய சேவை கட்டணம் அமல்..!!

By Soundarya on மாசி 15, 2026

Spread the love

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் ₹25,000-க்கு அதிகமான உடனடி பணப்பரிமாற்ற (IMPS) சேவைக்கு புதிய கட்டணங்கள் வசூலிக்கப்படும். முன்னதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வழங்கப்பட்ட சில சலுகைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது யோனோ (YONO) செயலி, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் ஆகிய அனைத்து டிஜிட்டல் தளங்களுக்கும் இந்த கட்டண முறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, ₹25,000 முதல் ₹1 லட்சம் வரையிலான பரிமாற்றங்களுக்கு ₹2 முதல் ₹5 வரையிலும், ₹1 லட்சம் முதல் ₹2 லட்சம் வரையிலான பரிமாற்றங்களுக்கு அதிகபட்சமாக ₹10 முதல் ₹20 வரையிலும் (ஜிஎஸ்டி தவிர்த்து) கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும், ₹1,000 வரையிலான சிறிய அளவிலான IMPS பரிமாற்றங்களுக்கு வழக்கம் போல எந்தக் கட்டணமும் இருக்காது. வங்கி கிளைகளுக்குச் சென்று மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான கட்டண முறையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களது பணப்பரிமாற்றங்களை திட்டமிட்டு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.