சாட்டை அண்ணே சேலத்திற்கு வந்து பார்.. “துண்டுதுண்டாக வெட்டிடுவாங்க நம்ம பயலுக” தவெக தொண்டரின் மிரட்டல் வீடியோவால் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி..!!

By Soundarya on மாசி 14, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, தவெக தொண்டர் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனுக்குப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துப் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தொண்டர் பேசுகையில், “சாட்டை அண்ணன் கூட்டத்தைப் பார்த்தீர்களா? அவர் தேனி பக்கம் போக வேண்டாம், சேலத்திற்கு வந்து பார்க்கட்டும்; இங்குள்ளவர்கள் அவரைத் துண்டு துண்டாக வெட்டிவிடுவார்கள். எங்கள் ஆட்கள் மிகவும் மோசமானவர்கள்; நடிகர் விஜய்க்காகத்தான் இங்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடியுள்ளது” என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்துடையவர்களை வன்முறை ரீதியாக மிரட்டுவது ஏற்கத்தக்கதல்ல எனப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஒரு கட்சியின் தலைமை நாகரிகமான அரசியலை முன்னெடுக்க முயலும்போது, தொண்டர்களின் இத்தகைய தரம் தாழ்ந்த பேச்சுக்கள் கட்சியின் பிம்பத்தைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.