தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. விஜய்யின் அரசியல் அனுபவம் குறித்து விமர்சித்த நயினார் நாகேந்திரன், “அவர் இன்னும் அனுபவம் இல்லாதவராக இருக்கிறார்; முதலில் அவர் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும், குறிப்பாக நடிகை த்ரிஷாவிடமிருந்து வெளியே வந்தால்தான் அரசியலில் மாற்றங்கள் நடக்கும்” என்று நயினார் நாகேந்திரனின் இந்தத் தனிப்பட்ட விமர்சனத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு, மற்றுமொரு கட்சித் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ஒரு பெண் கலைஞரைக் கொச்சப்படுத்தும் விதமாகப் பேசுவது தரம் தாழ்ந்த அரசியல் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக, விஜய் தனது கட்சியின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசியது குறித்து விமர்சித்த நயினார் நாகேந்திரன், “விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை, அவர் மேடையில் டான்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டிருக்கிறார்” என ஏற்கனவே தாக்கிப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
