director selvaraghavan

ஒரு டைரக்டராக ரொம்பவும் டார்ச்சர் பண்ணிட்டேன் என்று இப்போது புரிகிறது – சூசகமாக சொன்ன பிரபல இயக்குனர்!

By Elango on மாசி 13, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடித்தும் வருகிறார். குறிப்பாக பீஸ்ட் பகாசூரன் மார்க் ஆண்டனி ராயன் போன்ற படங்களில் நல்ல நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் கூறியதாவது, தனுஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒருநாள் அவரை தடுத்து நிறுத்தி, எப்படி இவ்வளவு தொடர்ந்து செய்ய முடிகிறது என்று கேட்டேன்.

அதற்கு அவர், வேறு என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் என்று பதில் அளித்தார். பின்னர் யோசித்துப் பார்த்தபோது அது அவருக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்பதை உணர்ந்தேன். முன்னதாக நடிகர்களிடம் அவர்களது நடிப்பு அளவை பற்றி நான் மிகவும் கண்டிப்பாக இருப்பேன். நடிப்பில் உள்ள சிரமம் எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அதற்காக இவ்வளவு உழைக்க வேண்டுமா என்பது நானே நடிக்கும் போதுதான், அந்த சிரமம் முழுமையாக புரிகிறது என்று இயக்குனர் செல்வராகவன் கூறியிருக்கிறார்.