actor arjun

தினமும் அதுக்காக ஒரு மணி நேரம் மட்டும் ஒதுக்குங்க… சினிமா ரசிகர்களுக்கு நடிகர் அர்ஜூன் விடுத்த கோரிக்கை!

By Elango on மாசி 13, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என அழைக்கப்படுவர் நடிகர் அர்ஜூன். தற்போது 62 வயதிலும் அவர் ஒரு இளம் ஹீரோவுக்கான உடல் அமைப்புடன் ஆரோக்கியமாக இருந்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளராகவும் அர்ஜூன் இருக்கிறார். இப்போது சில படங்களில் வில்லன் கேரக்டரிலும் அவர் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அர்ஜூன் கூறியதாவது, தினமும் உடலுக்காக நேரம் ஒதுக்குங்கள். தினமும் உங்க உடலை ஒரு மணி நேரம் கவனித்தால் அந்த நாளில் மீதம் இருக்கும் 23 மணி நேரமும் உங்களை அது பார்த்துக் கொள்ளும். தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

   

ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். நான் நடிகன் என்பதற்காகவோ என் தொழிலுக்காகவோ நான் உடற்பயிற்சி செய்யவில்லை. ஆரோக்கியமாக இருப்பது நமக்கானது மட்டுமல்ல. நம்மை சார்ந்து இருப்பவர்களுக்காகவும் தான். உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் தேவை. அதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம் என்று நடிகர் அர்ஜூன் கூறியிருக்கிறார்.