கபடி ஆடுகளத்தில் எதிராளிகளைத் திணறடித்த ஒரு தேசிய அளவிலான வீரர், இன்று ஒரு நாய்க்காகக் காட்டிய கருணையால் உயிருக்குப் போராடி வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புரோ கபடி (Pro Kabaddi) நட்சத்திரமான பிரிஜேஷ் சோலங்கி (Brajesh Solanki), ஆபத்தில் இருந்த நாய் ஒன்றைக் காப்பாற்ற முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அந்த நாயால் கடிக்கப்பட்டார். அந்தச் சிறு காயம், இன்று அவரை ரேபிஸ் (Rabies) நோயின் பிடியில் தள்ளி, மருத்துவமனை படுக்கையில் மரணத்தோடு போராட வைத்துள்ளது. ஒரு நொடிப் பொழுதில் மனித வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதற்கு இது ஒரு துயரமான உதாரணமாக மாறியுள்ளது.
Brajesh Solanki, From the Kabaddi mat to a hospital bed, he was a national and pro Kabaddi player and bitten by a dog while trying to save it
Today he is battling with rabies, Life can change in a moment pic.twitter.com/47OBBQESvv
— Voice of Hindus (@Warlock_Shubh) February 12, 2026
தற்போது ரேபிஸ் நோயின் தீவிர பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிஜேஷ் சோலங்கியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. துடிப்பான விளையாட்டு வீரராக வலம் வந்தவர், இன்று சுயநினைவற்ற நிலையில் சிகிச்சைப் பெற்று வருவது அவரது குடும்பத்தினரையும், கபடி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கருணை உள்ளத்தோடு ஒரு ஜீவனைக் காப்பாற்றச் சென்றவருக்கு இத்தகைய நிலை நேர்ந்தது சமூக வலைதளங்களில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் கபடி ஆடுகளத்திற்குத் திரும்ப வேண்டும் என விளையாட்டு உலகமே பிரார்த்தித்து வருகிறது.
