உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள இன்வெர்டிஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது, எதிர்பாராத விதமாக பலூன்கள் வெடித்துச் சிதறிய விபத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்தனர். விழாவின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான வண்ணமயமான பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்ட சில நிமிடங்களிலேயே, அவற்றுக்கிடையே திடீரெனத் தீப்பிழம்புகள் தோன்றி வெடிப்பு ஏற்பட்டது. ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் ஒன்றாக இருந்தபோது ஏற்பட்ட இந்தத் தீ விபத்து அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது.
<
गैस भरे गुब्बारों में एक और ब्लास्ट
यूपी के बरेली के एक कॉलेज में एक कार्यक्रम के दौरान गैस से भरा गुब्बारा फट गया.
इससे निकली आग की लपट से चार छात्र आ गए. और हल्का झुलस गए. pic.twitter.com/NHXhOyLrj9
— Priya singh (@priyarajputlive) February 12, 2026
/div>
இந்த விபத்தில் சிக்கிய நான்கு மாணவர்கள் லேசான தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். பலூன்கள் கொத்தாக உயர்ந்து சென்றபோது ஏற்பட்ட இந்த மின்னல் வேக வெடிப்பு மற்றும் ஆரஞ்சு நிறத் தீப்பிழம்புகள் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த அசம்பாவிதத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
