Breaking: ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கில்… ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு நீதிமன்றம் உத்தரவு..!!

By Soundarya on மாசி 12, 2026

Spread the love

ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத்குமாருக்கு எதிராக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி தாக்கல் செய்த ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சம்பத்குமார் அளித்த சர்ச்சைக்குரிய பேட்டிகள் அடங்கிய சிடி (CD) நகல்களை தமக்கு வழங்க வேண்டும் என தோனி தரப்பில் கோரப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிமன்றம், அந்த வீடியோ ஆதாரங்களை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான செலவுத் தொகையான ரூ.10 லட்சத்தை நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் பெயரில் தோனி வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

சூதாட்டப் புகார்கள் தொடர்பாகத் தன் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி, சம்பத்குமார் மற்றும் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக கடந்த 2014-ம் ஆண்டு தோனி இந்த வழக்கைத் தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆதாரங்களைச் சரிபார்க்கும் பணிகளுக்காக இந்தக் கட்டணத்தைச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தத் தொகையைச் செலுத்திய பிறகு, குறிப்பிட்ட சிடி-க்களின் நகல்கள் இரு தரப்பிற்கும் வழங்கப்படும் என்றும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.