“விஜய்க்கு ஓட்டு போடச் சொல்லி அடிச்சாங்க”… நடுரோட்டில் கதறிய பெண்கள்… திமுகவின் ‘நாடகத்தை’ கிழித்துத் தொங்கவிட்ட தவெக…!

By Nanthini on மாசி 12, 2026

Spread the love

தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலில், சென்னை துறைமுகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக நிர்வாகிகள் தொகுதி ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, திமுகவைச் சேர்ந்த ரவுடிகள் தங்களைத் தாக்கியதாக தவெக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்த நிலையில், திமுக தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் திருப்பமாக, தவெகவினர் தங்களை வீட்டுக்குள் புகுந்து தாக்கியதாகவும், விஜய்க்கே வாக்கு அளிக்க வேண்டும் என்று மிரட்டியதாகவும் இரண்டு பெண்கள் ஊடகங்களில் பேட்டியளித்தனர். பொதுமக்கள் என்ற போர்வையில் அவர்கள் அளித்த இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் திமுகவினரால் பரப்பப்பட்டது. இருப்பினும், அமைச்சரின் விளக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்த இந்தப் பேட்டி, அடுத்த சில மணிநேரங்களிலேயே சர்ச்சையில் சிக்கியது.

   

தவெக ஆதரவாளர்கள் அந்தப் பெண்களின் பின்னணியை ஆய்வு செய்தபோது, அவர்கள் இருவரும் திமுகவின் தீவிரத் தொண்டர்கள் என்பதற்கான புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டனர். பொதுமக்கள் போல வேடமிட்டு தவெக மீது பழி சுமத்த திமுகவினர் நாடகமாடுவதாக தவெக தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அந்தப் பெண்களின் ‘நடிப்பிற்கு’ ஆஸ்கார் விருது வழங்கலாம் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.