“வந்தால் வரட்டும், போனால் போகட்டும்” கூட்டணியை நம்பி கட்சி நடத்த முடியாது… காங்கிரஸ் கட்சிக்கு ஷாக் கொடுத்த திமுக அமைச்சர்..!!

By Soundarya on மாசி 12, 2026

Spread the love

திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் வியூகம் குறித்து மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்த அதிரடி கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. காங்கிரஸ் கட்சி வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும். ஒரு கூட்டணியை மட்டுமே நம்பி நாம் அரசியல் நடத்த முடியாது” என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்த இந்த முடிவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பார்த்துக் கொள்வார் என்றும், திமுக எதற்கும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திராவிட இயக்கம் மக்களுக்கான சேவையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த ஒன்று; அது மற்ற கட்சிகளைச் சார்ந்து இயங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை அவர் வலியுறுத்தினார். திமுக தனித்து நின்றாலும் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் வலிமை கொண்டது எனவும் அவர் பேசினார். பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றும், அதிமுக ஒரு ‘முடிந்துபோன சக்தி’ என்றும் அவர் சாடினார். அத்துடன், விஜய்யின் தவெக மாநாட்டிற்கு வந்தவர்கள் வாக்களிக்கத் தகுதியற்ற சிறுவர்கள் என்று தான் முன்பே கூறிய விமர்சனத்தையும் அவர் இக்கூட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத்தினார்.