அமைச்சர் காந்தியின் பதவி பறிப்பு..? முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு… அதிர்ச்சியில் திமுக வட்டாரம்..!!

By Soundarya on மாசி 11, 2026

Spread the love

தமிழக அமைச்சரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக இருக்கும் ஆர். காந்தியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு விழாவிலேயே அமைச்சர் காந்தியின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இருவருக்கும் இடையிலான விரிசல் மேலும் அதிகரித்துள்ளதைச் சமீபத்திய நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

நேற்று ராணிப்பேட்டையில் நடைபெற்ற டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை தொடக்க விழாவில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான காந்தி கலந்துகொண்ட போதிலும், முதல்வர் அவரைப் பெருமளவில் புறக்கணித்தது அப்பட்டமாகத் தெரிந்தது. குறிப்பாக, அமைச்சர்கள் கே.என். நேரு, டி.ஆர்.பி. ராஜா மற்றும் எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோருடன் மட்டுமே முதல்வர் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்; அந்தப் புகைப்படத்தில் அமைச்சர் காந்தி இடம்பெறவில்லை. சொந்த மாவட்டத்திலேயே அமைச்சருக்கு ஏற்பட்ட இந்தச் சூழல், விரைவில் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் ஆர். காந்தியின் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.