நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. ஆனால் மே மாதத்துக்கு முன்பாக ஏப்ரல் மாதமே சட்டசபை தேர்தல் வந்தால் மீண்டும் இந்த படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளது. இதற்கிடையே ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கருப்பு படத்தை ரூ. 43 கோடி ரூபாய் விலை கொடுத்து ஜீ 5 ஓடிடி உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமம் பெற்றுள்ளது.
இந்த படத்தை ரூ. 75 கோடி வரை விலை பேசிய நிலையில் அந்தளவுக்கு படம் வியாபாரம் நடக்கவில்லை. இதில் மற்றொரு சிக்கலும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது ஓடிடி நிறுவனங்கள் புதிய நிபந்தனைகளை கொண்டு வந்துள்ளது. அதாவது ஒரு படத்தை அதிக விலை கொடுத்து வாங்கினாலும், அந்த படம் தியேட்டரில் ரிலீஸாகி பெரிய வசூலை பெறவில்லை என்றால், வாங்கிய விலை அதிரடியாக குறிப்பிட்ட சதவீதம் குறைக்கப்படும்.
அதே நேரத்தில் அந்த படம் மிகப்பெரிய வசூலை குவித்தால் ஓடிடி உரிமம் வாங்கிய விலையில் குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தப்படும் என்பதுதான் இது. ஒருவிதத்தில் இது நேர்மையான ஒப்பந்தம் என்றாலும் கருப்பு படம் ஓடிடி உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமம் என மொத்தம் ரூ. 43 கோடிக்கு விலை போயுள்ளது. எனவே தியேட்டரில் இந்த படம் கணிசமான வசூலை குவித்தால் தான் இதே தொகை தயாரிப்பாளருக்கு கிடைக்கும். இல்லை என்றால் விலை குறையும் அபாயமும் உள்ளது.
