இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா, தீவிர வயிற்றுத் தொற்று (Stomach infection) காரணமாக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் அவர், கடந்த இரண்டு நாட்களாக மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டும் காய்ச்சல் மற்றும் வயிற்றுத் தொற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு, குளுக்கோஸ் (Drips) ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாளை (பிப். 12) நடைபெற உள்ள நமீபியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் அவர் பங்கேற்பது மிகவும் சந்தேகம் என பிசிசிஐ (BCCI) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாகத் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களம் இறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
