“200+ தொகுதிகளே இலக்கு, கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்?”… ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…. அதிரும் அறிவாலயம்….!

By Nanthini on மாசி 11, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் தொகுதிப் பங்கீட்டுக் குழு தனது பணிகளைத் தொடங்கும் என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் திமுக ஏற்கனவே தீவிரப்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மற்றும் மண்டல வாரியான மாநாடுகள் எனப் பல்வேறு களப்பணிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவும் சுமார் 75,000 பரிந்துரைகளைப் பெற்றுள்ளதாகத் திமுக தலைமை சுட்டிக்காட்டியுள்ளது.

   

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபெறும் சட்டமன்ற விவாதங்கள் மற்றும் அரசுப் பணிகள் நிறைவடைந்த பின்னரே, முறைப்படி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக திமுக தலைவரால் விரைவில் தனியாக ஒரு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட இருக்கிறது.

   

பிப்ரவரி 22 முதல் தொடங்கும் இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் மற்றும் தொகுதிகள் குறித்த இறுதி முடிவு எட்டப்படும். ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வரும் திமுக, கூட்டணிக் கட்சிகளுடன் சுமூகமான உடன்பாட்டை ஏற்படுத்தி, தேர்தலுக்கான இறுதிக்கட்ட வியூகங்களை வகுப்பதில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது.