மாவட்ட கல்வி அலுவலர் தேர்வின் தேதி மாற்றம்.. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

By Soundarya on மாசி 10, 2026

Spread the love

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மாவட்ட கல்வி அலுவலர் (District Educational Officer – DEO) பணிக்கான முதன்மைத் தேர்வுத் தேதிகளை மாற்றம் செய்துள்ளது. முன்னதாக மார்ச் 12 முதல் 15 வரை நடைபெறவிருந்த இத்தேர்வுகள், தற்போது மார்ச் 22 முதல் மார்ச் 25, 2026 வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கால அட்டவணையின்படி, கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு மார்ச் 22-ம் தேதியும், பொது அறிவுத் தேர்வுகள் மார்ச் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். இந்தத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் (Hall Tickets) TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 12-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படும்