FLASH: திமுக – தவெக-வினர் இடையே வெடித்த திடீர் மோதல்… சற்றுமுன் பரபரப்பு..!!

By Soundarya on மாசி 10, 2026

Spread the love

சம்பவத்தன்று சென்னை பாரிமுனை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள், கட்சியின் பெயரிடப்பட்ட துண்டு அணிந்து பொதுமக்களிடம் சில கருத்துக்கணிப்புகளை (சர்வே) சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திமுகவினர், இதுபோன்ற சர்வேக்களை எடுப்பதற்கு முறையான காவல்துறை அனுமதி பெற வேண்டும் என்று கூறி அவர்களைத் தடுத்துள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது.

இந்தத் திடீர் மோதலால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்து நிலைமையைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் புகார் ஏதும் அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அனுமதியின்றி சர்வே எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .